2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணிகளை விடுவிக்க டக்ளஸ் நடவடிக்கை

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஷ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் காணிகளை பயிர்ச்செய்கை, பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்காக விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திணைக்கள அதிகாரிகள் காணிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின்கீழிருக்கும், முன்னர் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கட்டுப்பாட்டின்கீழு் கொண்டுவரப்பட்ட காணிகள் தொடர்பான விபரமான பட்டியலுடன், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் அவற்றை விடுவிப்பதற்கான கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பித்திருந்தார்.

இதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ, இவைபற்றி ஆராய்ந்து பொருத்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு காணி அமைச்சரைப் பணித்திருந்தார்.

கரைச்சிப் பிரதேச செயலக பிரிவின்கீழ், பொன்னகர், கண்ணகைபுரம், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் ஜெயபுரம், பண்டிவெட்டி, கரியாலைநாகபடுவான், திக்குவில், பள்ளிக்குடா ஆகிய பகுதிகளிலும் உள்ள காணிகளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் தலைமையில் செயலக அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்ட வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அவற்றில் விடுவிக்கப்படக்கூடிய காணிகள் பற்றி விரிவாக ஆராய்ந்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு அறிக்கையிட்டனர்.

இதேபோல், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் புளியம்போக்கணை, கல்மடு ஆகிய பகுதிகளுக்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கோவில்வயல் பகுதிக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில் செயலக அதிகாரிகளுடன் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அந்தக் காணிகளை விடுவிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அறிக்கையிட்டனர்.

 

ஆனைவிடுந்தான், கண்ணகைபுரம், கரியாலைநாகபடுவான் ஆகிய பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும், பள்ளிக்குடா பகுதியில் புல் வளர்த்து கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் அனுமதிக்குமாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்துள்ள அதிகாரிகள், ஏனைய கோரிக்கைகள் குறித்து மேலதிகாரிகளுடன் கலந்துரையாடி காலக்கிரமத்தில் அவற்றை விடுவிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பாக அறிக்கையிடுவதாக டக்ளஸ் தேவானந்தாவிடம் உறதியளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .