Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் இன்று (31) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மேலும் கூறியதாவது,
“கிளிநொச்சி - இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“இந்த மக்களுடைய காணிகளை இன்னமும் அரசாங்கம் விடுவிப்பதற்கு தயாராகவில்லை. அதைவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில், நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை படையினர் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதும், அதில் பழைய நீர்த்தாங்கியை அகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், இதுவரை ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“மேலும், இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குளேயே சேரும்” எனத் தெரிவித்தார்.
8 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago