Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணிக்குப் பின்புறமாக உள்ள காணியில் வசித்து வரும் மக்களை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் இராணுவத்தினர், இன்று (10) வௌியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனால், அப்பகுதி மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்துக்கு வருகைந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்துரைத்த அப்பகுதி மக்கள், இந்தக் காணியில், தாங்கள் 1996ஆம் ஆண்டில் குடியேறி வாழ்ந்து வந்த போது, மாவீரர் துயிலுமில்ல பாதுகாப்பு காரணங்களுக்காக, தாம் அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வௌியேறிதாகத் தெரிவித்தனர்.
பின்னர், 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது, தாம் மீண்டும் தமது காணிகளைச் சுத்தம் செய்து மீள்குடியேறியதாகத் தெரிவித்த அவர்கள், 2015ஆம் ஆண்டு, தங்களுக்கான காணிப் பத்திரமும் வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டதாகக் கூறினர்.
இந்நிலையில், மாவீரர் துயிலுமில்ல காணியில் உள்ள இராணுவத்தினர், வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களின் தணையுடன், தமது காணி வனஜீவராசி திணைக்களத்தின் ஆளுகைக்குள் வருவதாகவும் தம்மை இந்தக் காணியை விட்டு செல்லுமாறும் மிரட்டுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா, இப்பகுதி மக்கள் தெரிவிக்கும் விடயம் உண்மையெனவும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக, இதற்கானத் தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago