Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
30 வயதுடைய யுவதியொருவர், தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமையால், அந்த யுவதியின் மீது, இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தின சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இடியன் துப்பாக்கியால், அவ்விளைஞன் இன்று (15) சுட்டுத்தள்ளியுள்ளார். யுவதி, வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, அந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.
முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமான குறித்த பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், நெடுங்கேணி பொலிஸாரால் ஏற்கெனவே தண்டனைக்கு உட்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை பெற்றவர்.
தண்டனை காலம் நிறைவடைந்து கிராமத்துக்கு திரும்பிய அந்த இளைஞன், சமூகத்தினருடன் ஒத்திசைவான செயற்பாடுகளுக்கு குந்தகம் புரிந்துவந்துள்ளார். இதுதொடர்பில், கிராம மக்களும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில், சேனைப்பிலவில் வசிக்கும் 30 வயதான யுவதி ஒருவரிம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திவந்துள்ளார். துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago