2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கிணற்றில் இருந்து பெண் குழந்தை சடலமாக மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா அம்மிவைத்தான் கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை காணமல் போயிருந்த நிலையில், வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்த அயலவர்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .