2025 மே 15, வியாழக்கிழமை

கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், இன்று அதிகாலை 2 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானை ஒன்று, கிராமவாசி ஒருவருடைய கிணற்றில் விழுந்துள்ளது

தொடர்ச்சியாக ஊருக்குள் நடமாடித் திரியும்  இந்தக் காட்டுயானை, இன்றைய தினமும் ஊருக்குள் நடமாடி திரிந்த சமயம், கிராமவாசி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்துள்ளது

கிணற்றில் விழுந்த யானையை வெளியேற்றுவதற்காக உரிய அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 2.45 மணி வரை நீண்ட போராட்டத்தின் பின்னர் யானை கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
 
குறித்த கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானையின் அச்சுறுத்தலின் மத்தியில் மக்கள் வாழ்ந்து வருவது வழமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .