Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், காடுகளை அழித்து, சட்டவிரோதமான முறையில் கிரவல் அகழ்வில் ஈடுபடுவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கு.திலீபன், அதற்கு உடந்தையாகச் செயற்படும் அதிகாரிகளின் விவரங்களும் வெளிப்படுத்தப்படுமென்றும் கூறினார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவில், கிரவல் அகழ்வு என்ற போர்வையில், பர ஏக்கர் கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பாக ஓமந்தை - மாணிக்கர் வளவுப் பகுதியில், 10 ஏக்கருக்கு மாத்திரம் கிரவல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 48 ஏக்கர் அளவில் கிரவல் அகழ்வுப் பணி இடம்பெற்றுள்ளதாகவும் சாடினார்.
நாம்பன்குளம் பகுதியிலும் இதே நிலைமைதான் எனத் தெரிவித்த அவர், அங்கிருந்த பெறுமதியான மரங்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதற்கான எந்த விதமான ஆவணங்களும் திணைக்களங்களிடம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
குறித்த பகுதியை தான் நேரில் சென்று பார்வையிட்ட போது, கிரவலை நிரப்பி வைத்திருந்த டிப்பர் வாகனம், அதனை கொட்டிவிட்டு கடந்து செல்கின்றதெனத் தெரிவித்த அவர், அனுமதிப்பத்திரம் இருந்தால் ஏன் அதனை கொட்ட வேண்டும் எனவும் வினவினார்.
எனவே, வனவளத் திணைக்களம் பொதுமக்களின் அன்றாட விடயங்களில் மாத்திரம் தலையிடுவதை நிறுத்தி, இப்படியான பிரச்சினைகiளைப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், கிரவல் அகழ்வுடன் தொடர்புடைய சில அதிகாரிகளின் தகவல்கள் கூட பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
'மாவட்ட மட்டங்களில் தீர்க்க முடியாத இவ்வாறான பிரச்சினைகளை எனது கவனத்துக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பாக இனி உயர்மட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனவும், கு.திலீபன் தெரிவித்தார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் கிரவல் அகழ்வுக்;கான அனுமதி வழங்கும் போது, மாவட்டச் செயலாளர், ஏனைய திணைக்கள மட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டப் பின்னர், அதனை தன்னுடைய கவனத்துக்குக் கொண்டுவருமாறு தெரிவித்துள்ளதாகவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago