2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிராம அலுவலகரை தேடும் பணி இன்றும் முன்னெடுப்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அருவியாற்றுப் பாலத்தின் அடியில், சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று (29) ஆற்றில் குளிக்க முற்பட்ட போது, சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகரை தேடும் பணி, இன்று (30) 2ஆவது நாளகவும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இதுவரை குறித்த கிராம அலுவலகர் கண்டு பிடிக்கப்படவில்லை.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர், நேற்று    மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆற்றில் குளிக்கும் போது, அவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதன்போது, அயலவர்களின் உதவியுடன் 5 பேர் காப்பாற்றப்பட்டனர். அதில், குறித்த கிராம உத்தியோகத்தர் காணாமல் போயுள்ளார்.

இவர்கள் போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆற்று பகுதியில் குளிக்கச் சென்று பலர் உயிரிழந்துள்ள நிலையில், அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனையும் மீறி கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேரும் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .