2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிராம உத்தியோகஸ்தர் கொலை: சந்தேகநபருக்கு பிணை

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பெட்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரனின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரனின் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (22), மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், இரண்டு சரீர பிணையிலும், சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிணை வழங்குபவர்களில் இருவரில் ஒருவர் மனு தாரராகவும் இருக்க வேண்டும் என்றும், மன்று உத்தரவிட்டது.

அத்தடன், மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இலுப்பைப்படவை பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் 12 மணி வரையுமான நேரத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள், குறித்த சந்தேக நபர் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் மன்றில் முன்வைக்கவில்லை.

இதனால,; ஆதாரங்கள் எவையும் நிரூபிக்க முடியாத நிலையில் சட்டத்தரணிகளினால் மன்றில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபர் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .