2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

’கிளிநொச்சி குளத்தை ஆழமாக்குவதற்குரிய அறிக்கையை சமர்ப்பிக்கவும்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 06 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி குளத்தை ஆழமாக்குவதற்குரிய மதிப்பீடுகளை மேற்கொண்டு, விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு, கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலர் எஸ்.சத்தியசீலன், நேற்று (05) தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு அறிக்கையினூடாகவே, நிதிமூலங்களை இனங்கண்டு, குளத்தின் அபிவிருத்திப் பணிகளை, விரைவாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பராமரிப்புக்குட்பட்ட கிளிநொச்சி குளத்தின் உட்பகுதி, நீண்டகாலமாக புனரமைக்கப்படாது, மண் மூடிய நிலையில், நீரைத்தேக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த குளத்தில் இருந்தே, கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் சுமார் நாற்பதாயிரம் பேருக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே, குறித்த குளத்தை ஆழப்படுத்தித் தருமாறு பல தரப்புக்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே. மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .