Niroshini / 2021 ஜூலை 22 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி சேவைச் சந்தையில், நேற்றும் (21) நேற்று முன்தினமும் (20), 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், கிளிநொச்சி சேவைச் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் 317 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், 05 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், 05 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேவை சந்தையை திறந்து விடுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் சுகாதார தரப்புடன் பேசி வருகின்றனர்.
சேவை சந்தையில் சேவை பெறுவோர், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு, சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் சேவை சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago