Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலைக்கான, ஆளணி வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதாக, பிராந்திய சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
யுத்தத்தினால் உள, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் வைத்திய தேவையினை பூர்த்தி செய்வதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் கணிசமான அளவு மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற, வைத்தியசாலையாகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவ் வைத்தியசாலையின் பல்வேறு பெளதீக மற்றும் ஆளனி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையினால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக் காணப்படுகின்றது.
எனினும் தற்போது, இவ்வைத்தியசாலையின் தரம் உயர்வு, புதிய சிகிச்சைப்பிரிவுகள் என்பன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஆளணித்தேவையை அதிகரிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த பல வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படுகின்ற நிலையில், இதன்படி 13 வைத்திய நிபுணர்கள், 37 வைத்திய உத்தியோகத்தர்கள், 5 பல் வைத்தியர்கள், 52 தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago