2024 மே 02, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு டெங்கு

Freelancer   / 2023 டிசெம்பர் 29 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து வருகை தந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேரிடையே  டெங்கு தொற்று  கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது 

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய  இடங்களில் பல்கலைக்கழக  கல்விக்கு சென்றவர்கள் மற்றும் தொழில் நிமித்தம்  சென்று திரும்பிய 15 பேர் டெங்கு தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இந்த இடங்களில் டெங்கு  நோயாளரகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. அத்துடன் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27ஆம் திகதி கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .