Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 01 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் இன்று முதல் நாட்பட்ட நோயாளர்கள் மற்றும் வீட்டில் படுகை நோயாளர்களாக உள்ளவர்களின் மருத்துவ தேவையினை அவரவர் வீடுகள் தேடி வந்து பூர்த்தி செய்யவுள்ளனர்.
எனவே இச் சேவையினை பெற்றுக்கொள்ள விரும்பும் பொது மக்கள் 021 2283037 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சேவையின் முதற்கட்டமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம், விவேகானந்தநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, அம்பாள்குளம், ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கணகாம்பிகைகுளம், அம்பாள்புரம், திருவையாறு, திருவையாறு மேற்கு இரத்தினபுரம், கிளிநொச்சிநகர், மருதநகர்,பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் வடக்கு திருநகர் தெற்கு,ஜெயந்திநகர், பெரியபரந்தன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதும் எனவும் அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago