2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிளிநொச்சிக்கு கள விஜயம்

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இதன்போது, கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை,  ஐயன்கோவிலடி, கண்டாவளை கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட வெள்ள நிலை தொடர்பான கள ஆய்வை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கூறிளார்.

கிளிநொச்சி - இரணைமடுகுளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில், குறித்த பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .