2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிளிநொச்சிக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்

Niroshini   / 2021 ஜூன் 29 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டின் தூதுவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் சாட் கற்றக், இன்று (29) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது, இரணைமடு இராணுவ தமையகக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவை சந்தித்த அவர், இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியசவில் நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டார்.

அத்துடன்,  இருநாட்டு நட்புறவையும் வெளிப்படுத்தும் வகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .