Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சந்தைத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு, முதற்கட்டமாக 200 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, கரைச்சிப் பிரதேசச் சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு, கரைச்சி பிரதேச சபையில், செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்ற சந்தை வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய மாடி சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கு, நகர அபிவிருத்தி அதிகாரசபையால் 767 மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பிடப்பட்டதாகத் தெரிவித்ததுடன், அதன் முதற்கட்டமாக, இவ்வருடம் 200 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தொடர்ந்து மூன்று கட்டங்களாக, நிதி விடுவிக்கப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்
10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago