2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 153 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், ரொமேஸ் மதுசங்க

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பன்னங்கண்டி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, 152 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை முற்றுகையிட்டுச் சோதனை செய்தபோது, 29 பொதிகளில் இருந்த 153.8 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 23 இலட்சம் ரூபாய் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டு உள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 10 இலட்சம் ரூபாய் பணமும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதாக, அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த, பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X