2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘கிளிநொச்சியில் 33,082 குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன’

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

போருக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளிலும், 43 ஆயிரத்து 720 குடும்பங்களைச் சேர்ந்த 01 இலட்சத்து 41 ஆயிரத்து 945 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இக்குடும்பங்களில், 2,500 தொடக்கம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் மாதாந்த வருமானத்தைப் பெற்றுவரும் 33 ஆயிரத்து 82 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அக்குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும்,  கிளிநொச்சி மாவட்டச் செயலகப் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 1,001 குடும்பங்களும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 2, 377 குடும்பங்களும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 2,591  குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் 1,132 குடும்பங்களுமாக மொத்தம் 7,101 குடும்பங்கள், மாதந்தந்தம் 2,500 ரூபாயை மட்டும் வருமானமாகப் பெற்றுவரும் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றன.

இதேபோன்று, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 6,888 குடும்பங்களும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 2,123  குடும்பங்களும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 2,007 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் 808  குடும்பங்களுமாக மொத்தம் 11,836 குடும்பங்கள், மாதந்தந்தம் 2,501 ரூபாய்க்கும் 5,000 ரூபாய்க்கும் இடைப்பட்ட வருமானத்தைப் பெற்றுவரும் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், கரைச்சியில் 9,784 குடும்பங்களும் கண்டாவளையில் 2,083 குடும்பங்களும், பூநகரியில் 1,480 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளியில் 808 குடும்பங்களுமாக மொத்தம் 14,155 குடும்பங்கள், 5,000 ரூபாய் தொடக்கம் 10 ஆயிரம் ரூபாய் வரையான வருமானத்தைக் கொண்ட குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றன.

இதேவேளை, மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானத்தைப் பெறும் 9,236 குடும்பங்களும், இங்கு காணப்படுகின்றன என்று, மேற்படி புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .