Editorial / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால்அருமைநாதன் தெரிவித்தார்.
கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் சுயமாக முன்வந்து தங்களைப் பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுவதோடு, 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும் உள்ளடங்குகின்றனர். அத்தோடு, கர்ப்பிணித் தாய்மார்கள் இருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியர் நிமால்அருமைநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கொரோனா தொற்றுப் பரவும் வேகம் அதிகரித்துக் காணப்படுகின்றமையால், பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும், 1ஆம், 2ஆம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்தாதவர்கள் அவற்றை உடனடியாக செலுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
25 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago
27 Jan 2026