2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘கிளிநொச்சியில் 6,000 விதவைகள் தலைமை தாங்குகின்றனர்’

Yuganthini   / 2017 ஜூன் 25 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் உள்ளதாக, மாவட்ட செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43 ஆயிரம் வரையான குடும்பங்களில் போர் காரணமாக விதவைகளாக்கப்பட்ட 1,717 பேரும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,445  பேர் விதவைகளாகவும்  காணப்படுகின்றனர்.

குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக, கணவனை இழந்த, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதற்கமைய, கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 951 விதவைகளும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 349 விதவைகளும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 199 விதவைகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 218 விதவைகளும் காணப்படுகின்றனர்.

இதுதவிர, கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 4,455 விதவைகள் காணப்படுகின்றனர் என மாவட்ட செயலகப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .