2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் கிராமத்துக்கு வீடு நாட்டுக்கு நிழல் தேசிய நிகழ்வு

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

கிராமத்துக்கு வீடு நாட்டுக்கு நிழல் எனும் திட்டத்தின் கீழ்,  நாடுபூராகவும் இன்றைய தினம், தேசிய நிகழ்வாக  வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டத்துக்கான நிகழ்வு வட்டக்கச்சி - ஐந்து வீட்டுத்திட்டம் கிராமத்தில் நடைபெற்றது. 

ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த வீடு, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒவ்வொரு வீடு அமையவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 95 வீடுகள் அமையவுள்ளது. குறித்த வீட்டை இரண்டு மாதத்துக்குள் புனரமைக்க வேண்டும்    

குறித்த நிகழ்வில்,  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார், அரச உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .