Princiya Dixci / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், மேலும் இரண்டு புதிய கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான சேவைகளை வழங்கும் வகையில், தற்போதுள்ள கமநல சேவை நிலையங்களுடன் மேலும் இரண்டு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய, பரந்தன் பிரதேசத்தில் ஒரு கமநல சேவை நிலையத்தையும் கண்டாவளை பிரதேசத்தில் ஒரு கமநல சேவை நிலையத்தையும் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கடந்தாண்டு டிசெம்பர் மாதம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே, இதற்கான முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முழங்காவில், அக்கராயன், இராமநாதபுரம், புளியம்பொக்கணை, கிளிநொச்சி, பளை, உருத்திரபுரம் ஆகிய 08 கமநல சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக, இந்த பரந்தன் கமநல சேவை நிலையம், கண்டாவளை கமநல சேவை நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025