2025 மே 22, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் மீன்பிடித்துறை அபிவிருத்தி

Editorial   / 2019 மே 13 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், இவ்வாண்டு மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடித்தொழிலை அபிவிருத்திச் செய்யும் நோக்கில், கடந்தாண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வாண்டு, மூன்று கடற்றொழில் பரிசோதகர் பிரிவுகளில், தலா 2 மில்லியன் ரூபாய் செலவில், அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கண்டாவளைக் கடற்றொழில் பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில், பொதுமண்டபமும் பச்சிலைப்பள்ளி கடற்றொழில் பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட புலோப்பளை அறத்திநகர் கிராமத்தில் மீனவர் ஓய்வு மண்டபமும் நாச்சிக்குடா கடற்றொழில் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட யாகப்பர் கிராமிய அமைப்பின் படகுத்துறையை ஆழப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X