2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்று (29) காலை  20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 

 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்குப் பின்புறமாக உள்ள குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற இருவர், வயல் கால்வாயில் இருந்த சடலத்தைக் கண்டுள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பில், பொலஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X