2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சில் கனரக வாகனங்கள் விபத்து

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூலை 05 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்துக்கு அருகில், கனரக வாகனங்கள் இரண்டு, நேருக்குநேர், நேற்று இரவு 11.30 மணியளவில் மோதுண்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர், தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாகச் சென்றுகொண்டிருந்த டிப்பரும் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ரக வாகனமும், வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டதனாலேயே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார்  தெரிவிக்கின்றனர். டிப்பரின் ஓட்டுநர் உதவியாளரும் லொறி ரக வாகனத்தின் ஓட்டுநருமே, காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில், இன்று காலை, அவை வீதியில் இருந்து அகற்றப்படும் வரைக்கும், ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.   

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .