2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிளியில் ஓட்டோ விபத்து: ஓட்டுநர் படுகாயம்; ஒருவரைக் காணவில்லை

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் ஓட்டோ விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பஸ் ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில் உள்ள பாலத்தில் விழுந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியை சேர்ந்த தியாகராச சிவநாதன் என்ற 54 வயதுடையவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுமுன் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவருடன் பயணித்த மற்றொருவரை காணவில்லை என ஓட்டுநரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .