2025 மே 02, வெள்ளிக்கிழமை

’குஞ்சுக்குளம் பாடசாலையை திறக்கவும்’

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வலயத்தில் மூடப்பட்டுள்ள வன்னேரிக்குளம் - குஞ்சுக்குளம் கிராமத்தின் கணேசா வித்தியாலயத்தை மீள இயக்குமாறு, கிளிநொச்சி வலய அதிகாரிகளிடம்  மணியங்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது 08 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குஞ்சுக்குளம் கிராமத்தின் கணேசா வித்தியாலயம் 2009ஆம் ஆண்டுடன் மூடப்பட்டுள்ள பாடசாலையாக காணப்படுகின்றது.

காரணம,; குஞ்சுக்குளம் கிராமம் முழுமையாக உவரடைந்து மக்கள் இடம் பெயர்ந்தமையாலேயே,  பாடசாலை மூடப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையை இயக்குவதன் மூலம் குறித்த கிராமத்தில் உள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பெரும் நன்மையடைவார்களென்று, அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .