Editorial / 2020 மே 20 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
பரந்தன் - பூநகரி வீதியின் குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் திருடப்பட்டமையால், பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதென, கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பி.கே. இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள போது, குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் திருடப்பட்டுள்ளனவெனவும் (குறித்த பாகங்களை சாதாரண மக்களால் அதன் ஆணிகள், நட்டுக்கள் என்பவற்றை கழற்றி திருட முடியாது) இதனால், தற்போது பாலம் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாறியுள்ளதெனவும் கூறினார்.
பாலத்தில் இரும்புக்காகத் திருடப்பட்டுள்ள பாகங்களின் பெறுமதி, 10 தொடக்கம் 15 மில்லியன் ரூபாய் வரை ஆகுமெனத் தெரிவித்த அவர், ஆனால் அதனை இரும்புக்காக விற்றால் ஒரு இலட்சம் வரையே விற்பனை செய்ய முடியுமெனவும் கூறினார்.
தற்போது, குடமுருட்டி பாலத்தில், கனரக வாகனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, பாலத்தின் ஒரு புறத்தில் பயணிகளை இறக்கி, மறுபுறத்தில் ஏற்றிச் செல்லுமாறும் வலியுறுத்தினார்.
“கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை காரியாலயத்துக்கு முன்பாக உள்ள இரும்புத் தொழிலகம் ஒன்றில் இருந்து பாலத்தின் பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, பாலத்தின் மற்றொரு தொகுதி பாகங்கள், கிளிநொச்சி ஏ9 வீதியின் 155ஆம் கட்டைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை” எனவும், இளங்கீரன் கூறினார்.
இந்தப் பாலத்தின் திருடப்பட்ட பாகங்கள் தொடர்பில் கொழும்புக்கு அறிவித்துள்ளதாகவும், அங்கு பாலத்தின் பாகங்கள் இருப்பின் மீண்டும் பெற்று பொருத்த முடியுமெனவும், அவர் கூறினார்.
தவறின் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்படுமென, அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago