2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’குடமுருட்டி பிணக்கைத் தீர்ப்பேன்’

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

குடமுருட்டிக் குளத்தின் கீழ் காணப்படுகின்ற காணிப் பிணக்குகளை, விரைவில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ்.திருலிங்கநாதன் தெரிவித்தார்.

குடமுருட்டி, கரியாலைநாகபடுவான் குளங்களின் சிறுபோக நெற்செய்கைக் கூட்டம், நேற்று (17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், விவசாயிகள் சட்டத் திட்டங்களைச் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் குளங்களின் நீரை விவசாயிகள் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

குடமுருட்டிக் குளத்தின் கீழ் காணப்படுகின்ற காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு, கிளிநொச்சி மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் குடமுருட்டிக் குளத்துக்கு விஜயம் மேற்கொண்டு, காணிப் பிணக்கு உள்ளவர்களைச் சந்தித்து, அந்தப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .