2025 ஜூலை 23, புதன்கிழமை

‘குடிநீருக்குத் தட்டுப்பாடு’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

வளலாய் வடக்கின் சில பகுதிகளுக்கு, குடி நீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படவில்லை என, அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையால், தொண்டமானறு பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் நீர் விநியோகம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட குடிநீர் குழாய் பிரதான வீதியை அண்மதித்த வீடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. இதனால், உள்ளக வீதிகளில் உள்ள குடிமனையாளர்கள் குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .