2025 மே 09, வெள்ளிக்கிழமை

’குடிநீரை விநியோகம் செய்யவும்’

Niroshini   / 2021 ஜூலை 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அ.அமிர்தலிங்கம், இந்நிலையில் குடிநீர் விநியோகத்தை பிரதேச செயலகம் மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அமைதிபுரம், புத்துவெட்டுவான் போன்ற நீண்ட தூர கிராமங்களுக்குச் சென்று குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், இந்நிலையில், இவ்வாறான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான வாகன வசதி பிரதேச சபையிடம் இல்லையென்றும் கூறினார்.

இந்நிலையில், துணுக்காய் பிரதேச செயலகத்தின் ஊடாக, மேற்படி கிராமங்களுக்கான குடிநீர் விநியோகித்தை மேற்கொள்ளமாறு, பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், அமிர்தலிங்கம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X