2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’குடிநீர் நெருக்கடி என்றால் தொடர்பு கொள்ளவும்’

Niroshini   / 2021 ஜூலை 19 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு கிராமத்தில், குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். 

கேப்பாப்புலவு, சூரிபுரம், பிலக்குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இக்கிராமத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது, பல கிணறுகள் மூடப்பட்டுள்ளன.  தற்போதுள்ள கிணறுகள் வறட்சி காரணமாக நீர் வற்றிக் காணப்படுவதால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தனிடம் வினவிய போது, கேப்பாப்புலவில் குடிநீர் நெருக்கடி என மக்கள் எவரும் பிரதேச சபையிடம் முறையிடவில்லை என பதிலளித்தார்.

மேலும், குடிநீர் நெருக்கடி என்றால் எந்நேரமும் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்ற இடங்களில் வாழ்கின்ற மக்கள் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபையிடம் அறிவிக்குமாறும், பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X