2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

குடிநீர் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

Yuganthini   / 2017 ஜூலை 02 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீரற்ற பிரதேசங்களாகக் காணப்படும் குமிழமுனை, கரியாலை நாகபடுவான், இரணைமாதாநகர், செல்லக்குறிஞ்சி ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீரை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில், முழங்காவில் வெங்கடேஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால், குடிநீர் விநியோகம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பூநகரி பிரதேச செயலாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், கிராம சேவையாளர்கள், முழங்காவில் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏனைய கிராமங்களினது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .