2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

குடிநீர் விநியோகக் கிணறுகளிலும் நீர் இல்லை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 06 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளொன்றுக்கு, 9,000 லீற்றர் தண்ணீரைப் பெறக்கூடியதாக இருந்த கிணறுகளில், தற்போதுள்ள வரட்சியால் நாளொன்றுக்கு 3,000 லீற்றர் வரையான தண்ணீரை மாத்திரமே பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது என, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் பா.சிவபாலராஜா, நேற்று (05) தெரிவித்தார்.

தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளர், “மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள 50 வீட்டுத் திட்டம், 30 வீட்டுத் திட்டம், பாலிநகர், பூவரசன்குளம், கொல்லிவிளான்குளம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடிகள் காணப்படுகின்றன” என்றார்.

“இவற்றுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகள், பிரதேச சபைக்கு சொந்தமான 3 பவுசர்கள் மூலமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட 2 பவுசர்கள் மூலமும் என 5 பவுசர்கள் மூலம் தலா 1,000 லீற்றர் கொண்ட கொள்கலன்கள் 25 இடங்களில் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் மேற்காள்ளப்பட்டு வருகின்றது.

நாளொன்றுக்கு 9,000 லீற்றர் தண்ணீரைப் பெறக்கூடியதாக இருந்த கிணறுகளில், தற்போதுள்ள வரட்சியால், நாளொன்றுக்கு, 3,000 லீற்றர் வரையான தண்ணீரை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. தற்போது வேறு கிணறுகளை இனங்கண்டு, அவற்றின் நீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றோம். பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் மேலும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .