சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மார்ச் 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகத்தில், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எம்.இராஜகோபால் தெரிவித்துள்ளார்
தற்போது நிலவும் கடும் வரட்சியினால், பூநகரிப்பிரதேசத்தில் பெருமளவான பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த மக்களுக்குரிய குடிநீரை விநியோகிப்பதுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களிலும், பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பூநகரிப்பிரதேச செயலரைத் தொடர்பு கொண்டு வினவியபோது,
பூநகரிப்பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீரை விநியோகிப்பதில் பிரதேச சபை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற போதும், தேவையான பகுதிகளுக்கு நீர்விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
அதாவது, ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வீதிகள் செப்பனிப்படாமை என்பன பாரிய சவால்கள் ஆகும்.
இதனைவிட, குடிநீர் தேவைப்படும் பகுதிகள், பாடசாலைகள் என்பவற்றுக்கு நாளாந்தம் 40 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதன் தேவைகள் மேலும் அதிகரிப்பதுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், இந்த மக்களுக்கு விநியோகிப்பதுக்கான குடிநீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன.
இந்த 40 ஆயிரம் லீற்றர் நீரையும் பூநகரி நெற்புலவு, முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், பூநகரிப்பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை இது ஒரு சவாலாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025