Editorial / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற குடிநீர்த் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் அக்கராயன் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
2010ஆம் ஆண்டின் பின்னர், அக்கராயனில் குடிநீர்த் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 433 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவது என திட்டமிடப்பட்டு இருந்த போதிலும், தற்போது 250 வரையான குடும்பங்களுக்கே குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
சமாதானபுரம், அக்கராயன் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர்த்திட்ட வேலைகள் இடம்பெறவில்லை. ஆறு மாதங்களில் சகல குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்குவோம் என தெரியப்படுத்தப்பட்ட போதிலும், பல ஆண்டுகள் கடந்தும் இக்குடிநீர்த் திட்டத்துக்கான வேலைகள் முழுமை பெறவில்லை.
இக்குடிநீர்த் திட்டத்துக்கான நீர் மூலகத்துக்கான திறந்த கிணறு நல்ல முறையில் நீர் ஊற்றுகளை கொண்டிருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.
அக்கராயன்குளத்தின் நீர் சுத்திகரிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களும் குடிநீர் வழங்குவதற்கான வேலைகளை முன்னெடுப்பதில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தாமதங்களை உருவாக்கி வருகின்றது.
இந்நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற வகையில் அக்கராயன் குடிநீர்த் திட்டத்தை முழுமைப்படுத்தும்படி அக்கராயன் பொது அமைப்புகள் வலியுறுத்துள்ளன.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago