2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

குமுழமுனையில் அடாத்தாக 200 ஏக்கரில் நெற்செய்கை

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - குமுழமுனை கமநல சேவை நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில், 200 ஏக்கர் வரையான நிலப்பரப்பில், அனுமதியின்றி சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தில் 2,700 ஏக்கருக்கு மட்டுமே அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி பெறாமல் மேலதிகமாக 200 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குமுழமுனை கமநல சேவை நிலைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான அனுமதியற்ற பயிர்ச் செய்கைக்கு மாவட்டச் செயலகம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .