Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஒன்றிணைந்த எதிரிணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சென்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முசமில் பத்ம உதயசாந்த மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர், முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு இன்று (03) சென்றனர்.
இவர்களுடன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் பெரும்பான்மை இன மக்களும், குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர்.
வெலிஓயா பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், குருந்தூர் மலைக்கு சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .