2025 மே 07, புதன்கிழமை

குளங்களை அண்மித்த பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

Niroshini   / 2021 நவம்பர் 11 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

வவுனியாவில், கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக , பாவற்குளத்தின் நீர் மட்டம் 16 அடியாக உயர்வடைந்துள்ளதாக, மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.

தொடர்தும் மழை பெய்து வருதனால் அதன் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைக் கூடிய நிலையே உள்ளது. எனவே, அதன் கீழ் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், அவர் அறிவுறுத்தியுள்ளா்.

அத்துடன், முகத்தான்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 5 அங்குலமாகவும், மருதமடுக்குளம் 12 அடி 3 அங்குலமாக நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரு குளங்களினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் கீழ் பகுதிகளில் இருக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஈரப்பெரியகுளம் 10 அடி 9 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 11 அடியாகவும் உயர்வடைந்துள்ளது.  அருவி ஆறு 6 அங்குலம் நீர் பாய்ந்து வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X