Editorial / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் 102ஆவது ஆண்டை முன்னிட்டு, 102 பானைகளில் பொங்கல் விழாவும் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வட மாகாண பொங்கல் விழாவும், இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோவில் இன்று (16) காலை நடைபெற்றன.
நிகழ்வின் முன்னதாக, இரணைமடு நீர்த் தேக்கத்தின் கீழுள்ள வயலில் அறுவடை செய்த நெற்கதிர், கனகாம்பிகை அம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, கோவிலில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, பொங்கல் விழா ஆரம்பமாகியது.
இவ்விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இந்தியத் துணை தூதரகத்தின் பதில் துாதுவர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் திருலிங்கநாதன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

26 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
6 hours ago
27 Jan 2026