2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குளத்தில் தவறி விழுந்த இளைஞன் மாயம்

Editorial   / 2024 நவம்பர் 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞனை காணவில்லை மாமடுவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை 926) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார். இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.  எனினும் இளைஞன் இது வரை கண்டுபிடிக்கபபடவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்த ஹசன் குணவர்த்தன என்ற இளைஞரே காணாமல் போனவர் ஆவார். குறித்த இளைஞனை தேடும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X