Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், “அபிவிருத்திக்கான ஒன்றிணைவு” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டன.
இதனடிப்படையில், மன்னார் மூர்வீதி, காட்டுபள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள குளம் புனரமைப்பு செய்யப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு என அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் மாலை நேரத்தில் பொதுமக்கள், பொழுது போக்குக்காக வருகின்ற போது, அவர்களுக்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பல உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில், இளைஞர்கள் ஏறி சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த புனரமைப்பு செய்யப்பட்ட குளம் சார்ந்த பகுதியில், இரவு நேரங்களில் இனம் தெரியாதவர்கள் மதுபானங்களை குடித்து விட்டு போத்தல்களை உடைத்து விட்டுச் செல்கின்றனர்.
இதனால் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சேதமாக்கப்பட்டுள்ள இருக்கைகளை மீண்டும் அமைத்து குறித்த பகுதியில் உரிய பராமறிப்புகளை மேற்கொள்ளுமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago