2025 மே 09, வெள்ளிக்கிழமை

குளிக்கச் சென்ற சிறுவனைக் காணவில்லை

Niroshini   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் - துணுக்காய் வீதியில், உதயசூரியன் நகர் பகுதியில், 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விஜயகுமார் விதுசன என்ற சிறுவனே, இவ்வாறு  நேற்று (10) இரவு முதல் காணாமல் போயுள்ளார்.

இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன் குளிக்கச் சென்ற கிணற்றடியில் உடைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், கிணற்றடிக்குச் சென்ற சிறுவன் மீண்டும்  வீட்டுக்கு வந்து சவர்க்காரம் எடுத்து சென்றுள்ளார். அவர் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் - துணுக்காய் வீதியில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இச்சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தோர், 077-0871475 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X