2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குழந்தைக்கு எமனாக மாறிய தொட்டில்

Freelancer   / 2021 டிசெம்பர் 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது.

குறித்த குழந்தை தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக  கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

ஆயினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் குழந்தை உயிரிழந்தது.

சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்குவயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X