Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 17 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என். நிபோஜன்
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று இடம்பெற்றது. இக்கூட்டமானது, இணைத் தலைவர்களான, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எவ்வாறெனினும், இக்கூட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சரவணபவன், டக்ளஸ் தேவனந்தா, எம் ஏ. சுமந்திரன் மற்றும் மாகாண சபை அமைச்சர்களில் கல்வி, சுகாதாரம், கடற்தொழில் அமைச்சர்கள் மூவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் வருகை தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில், இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு, ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஜனாதிபதியின் நிலமெகவர என்ற நடமாடும் சேவையில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 2,380 பேர் வருகை தந்தபோது 2,308 பேர் சேவைகளை நிவர்த்தி செய்து சென்றிருக்கிறார்கள் என்று வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .