2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘கூட்டமைப்பு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க வேண்டும்’

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதுக்காக உருவாக்கப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என கிளிநொச்சி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்கள்.

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்று (18) மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, பூநகரி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வட்டார அமைப்பாளர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில், கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல மக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

அதில் கருத்துரைத்தவர்கள் பலர், தற்போதைய அரசியல் நெருக்கடிகளில் அகப்பட்டு விலைபோகாது எமது மக்களின் நலனுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திரமுறைகளினூடாக செயற்பட வேண்டும் என தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .