2025 மே 12, திங்கட்கிழமை

கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு

Niroshini   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகள் 94, மன்னார் பொலிஸார், இன்று (18) அதிகாலை 4.30 மணியளவில் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா, 200 கிலோ 825 கிராம் எடை கொண்டதெனவும், இவை 20 மில்லியன் ரூபாய் பெறுமதியெனவும், மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X