2025 மே 15, வியாழக்கிழமை

கேரளா கஞ்சா மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்,  க. அகரன்

கிளிநொச்சியில், நேற்று (20) அதிகாலை, 77.3 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய மதுஒழிப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன்,  இரண்டு அலைபேசிகள், படகு, 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சான்று பொருள்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும், பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .