2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கைதிகளும் மனிதர்கள்’ வாசகத்தை அழிக்க வேண்டும்

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக எழுதி இருக்கின்ற 'கைதிகளும் மனிதர்கள்' என்ற வாசகத்தை முதலில் அழிக்க வேண்டுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அவர்களை இந்த அரசாங்கம் மனிதர்களாக மதித்திருந்தால், அந்தந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

கிளிநொச்சி - கட்டகாடு பகுதியில், நேற்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் அரசியல் கைதிகளாக  இருக்கின்ற தங்களுடைய முன்னாள் போராளிகள் பலரை விடுவிப்பதில் இலங்கை அரசாங்கம் அசமந்த போக்கைக் கடைப்பிடித்து வருகின்றதென்றார்.

குறிப்பாக, கொரோனா காலத்தில், அனைத்து அரசியல் கைதிகளும் பாதிப்படைந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்த அவர், .இந்நிலையிலும் 4ட அவர்கள் விடுவிக்கடவில்லை எனவும் ஆனால் பல நாடுகளில் உள்ள அரசியல் கைதிகள், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார்.

எனவே, அந்த விடுதலையை இந்த  அரசாங்கம்  நிராகரித்து  இருப்பது  மனித குலத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் ஓர் எதிரான செயற்பாடாகும் எனவும், சிறிதரன் எம்.பி கூறினார்.

அத்துடன், அரசாங்கத்தின் சதி முயற்சியே வடக்கு மாகாண சபை நடைபெறாமல் இருப்பதற்கு காரணமெனத் தெரிவித்த அவர், நடத்தினால் தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் அரசாங்கத்திடம் நிலவுகின்றது எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .